கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி பொருள், போதைப்போருட்களை கண்டுபிடிப்பதற்கு ரோபோக்கள்

வெடி பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு செயலகம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் பரிசேதனைக்காக 2 ரோபோ இயந்திரங்களை இன்று முதல் ஈடுபடுத்தியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோரை சோதனையிடுவதற்காக நுளைவாயில் பகுதியில் இந்த புதிய இரண்டு ரோபோக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Robot Inspection Dog என்ற இந்த இரண்டு ரோபோக்கள் சீன குடியரசினால் இலங்கை பொலிஸாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் விமான பயணிகள் மற்றும் பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் வெடி பொருட்கள் மற்றும் அனைத்து ரக போதைப்பொருட்களையும் அறிந்து கொள்ளமுடியும். இதற்கான ஆற்றலை இந்த 2 ரோபோக்கள் கொண்டுள்ளன.

இந்த ஒரு ரோபோ இயந்திரத்தின் பெறுமதி 8.5 கோடி ரூபாவாகும். இவ்வாறான 3 ரோபோக்களை சீன அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவற்றில் 2 பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு செயலகத்தின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து வருவோர் மற்றும் வெளியேறுவோர் நுளைவாயிலிற்கு அருகாமையில் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அங்கும் இங்கும் நகர்ந்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.