புற்றுநோய் சிகிச்சைக்கான ஒளடத கொள்வனவிற்கு 1000 மில்லியன் நிதி ஒதுக்கீடு - சுகாதார அமைச்சு



புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான அத்தியவசிய ஒளடதங்களை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு தேசிய திறைசேரியிலிருந்து 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது,

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களுக்கு தேவையான அத்தியவசிய ஒளடதங்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தேசிய திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது அத்தியவசிய 24 வகை ஒளடதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

புற்று நோய் ஒளடதங்கள் தொடர்பில் கடந்த காலத்தில் பாரிய தட்டுபாடுகள் ஏற்டபட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி மற்றும் செயலாளர் பி.எம்.எஸ்.சால்ஸ் ஆகியோர் திறைசேரியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளனர். இதன் பின்னரே நிதி ஒதுக்கிடப்பட்டது.

இதே வேளை அவசர கொள்வனவு முறையிலும் , அத்தியாவசிய ஒளடதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைக்கு வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒளடதங்களை கொள்வனவு செய்யும் நிறுவனங்களிலிருந்தும் ஒளடதங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் எதிர்வரும் காலங்களில் ஒளடத தட்டுப்பாட்டை நிரவர்த்தி செய்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டு.