அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ம் திகதி


அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டமே எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவையில், உச்ச நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதில்லை. அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற பின்னர்தான் அவர் அரசியலமைப்பு பேரவையின் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும். எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐ.தே.க தீர்மானித்திருந்த போதிலும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாது அவர் 12ஆம் திகதி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.