பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7 பேருக்கு பதவி உயர்வுபெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்ப அதற்கான தகுதிகளை பூர்த்தி செய்த ஏழு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குறித்த பதவியுயர்வு வழங்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.