பெரிகல்லாறு பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்


(ரவிப்ரியா)
பெரியகல்லாறு பொது நூலக கேடபோர் கூடத்தில் வியாழனன்று பிற்பகல் பொது நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து வாசகர் வட்ட தலைவர் எஸ்.ஹறோசாந் தலைமையில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளின் போது, பிரதம அதிதியாகக் மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் ஞா.யோகநாதன கலந்து கொண்டார்.;
கௌரவ அதிதியாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன்,மற்றம் விசேட அதிதியாக அதிபர் எஸ்.சசிதரனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வாசகர் வட்டத்தினால் பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், உரைகள் என்பன விசேடமாக நடைபெற்றன. வாசகர் வட்ட முக்கியஸ்தர்கள் சிலருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நன்கொடையாளர் சார்பில் புத்தக பொதி தவிசாளர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன் சகிதம் நூலகப் பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.