ஆரம்பப் பிரிவுக்கான இரண்டாம் தேசிய மொழித்தினமும், பரிசளிப்பு விழாவும்



2019ற்கான ஆரம்பப் பிரிவுக்கான இரண்டாம் தேசிய மொழித்தினமும் பரிசளிப்பு விழாவும் கல்குடா கல்வி வலயத்தின் இரண்டாம்மொழி ஆசிரிய ஆலோசகர் திருமதி த.தர்மராஜா அவர்களின் தலைமையில், மட்/ககு/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் 2019.12.08 இன்று காலை இடம்பெற்றது.
கல்குடா கல்வி வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தினகரன் ரவி அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக கல்குடா கல்வி வலயத்தின் நிர்வாகப் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.சங்கரி தங்கேஸ்வரன் அவர்களும், கல்குடா கல்வி வலயத்தின் முகாமைத்துவப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ் அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று வடக்குக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.க. ஜெயவதனன் அவர்களும், கோறளைப் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.நா.குணலிங்கம் அவர்களும்,
அழைப்பு அதிதிகளாக ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.வை.சின்னத்தம்பி அவர்களும், செலிங்கோ காப்புறுதி நிறுவன முகாமையாளர் திரு.சு.மதிவாணன் அவர்களும்,
விசேட அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாம் மொழியாகிய சிங்களத்தை சிறப்புறக் கற்பதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்விழா மிகச் செம்மையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டுயமை பெற்றோர்கள் மத்தியிலும், பிள்ளைகளிடத்திலும் நேர்வினை மாற்றத்தை தோற்றுவிக்கும் சிறப்பான விடயமாகும்.