நாடாளுமன்ற தேர்தல் ஆசனப்பங்கீடு குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்

நாடாளுமன்ற தேர்தல் ஆசனப்பங்கீடு குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கூட்டத்தை போலவே இம்முறையும் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மிக அதிகமான ஆசனங்களை எதிர்பார்ப்பதால் இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீண்டும் கொழும்பில் அடுத்த வாரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்திப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.