கோட்டைகல்லாறு மகா வித்தியாலயத்திற்கு பாண்டுவாத்திய கருவிகள் அன்பளிப்பு(ரவிப்ரியா)
கோட்டைகல்லாறு மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் பாண்டு வாத்திய அணியை மேம்படுத்தும் நோக்குடன் முக்கிய தேவையாக இருந்த ஒரு இலட்சம் பெறுமதியான பாண்டு வாத்திய கருவிகளை கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த பிரான்சில் வதியும் பழைய மாணவன் ர.விமலஸ்ரீ அன்பளிப்புச் செய்துள்ளார்.இவற்றை கையேற்கும் சம்பிரதாய பூர்வமான எளிமையான வைபவம் மகாவித்தியாலய புதிய அதிபர் எஸ்.கணேஸ்வரன் தலைமையில் பிரதி அதிபர் இராஜேந்திரனின் வரவேற்பரையுடன் கடந்த வெள்ளியன்று காலை நடைபெற்றது.

மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றம் பழைய மாணவ சங்க அங்கத்தவர் அ.புருஷோத்தமன ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் அதிபரின் உரையையம் நன்றியறிதலையம் தொடர்ந்து  பழைய மாணவனின் தாய் திருமதி வேலுப்பிள்ளை, அண்ணர் ர.வினுபாலா ஆகிய குடும்ப அங்கத்தவர்கள் விமலஸ்ரீ சார்பாக அதிபரிடம் புத்தம் புதிய தரம்மிக்க பாண்டுவாத்திய இசைக் கருவிகளை கையளிக்க அதிபர் பொறுப்பான ஆசிரியைகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

அண்மையில் புதிய அதிபராக பதவி ஏற்ற எஸ்.கணேஸ்வரன் பழைய மாணவர் சங்கத்துடனும் சமூக அமைப்பக்களுடனும் நல்லுறவை பேணி; பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளையும். இணைப் பாடவிதானங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் ஒரு அங்கமாகவே இந் நிகழ்வு இடம் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்க விடயமென பழைய மாணவர் சங்க தரப்பினர் தெரிவித்தனர். அத்துடன் அத்தகைய நல்ல முயற்சிகளுக்கு தங்கள் சங்கம் பக்கபலமாக இருந்து செயற்படும் என்றும் தெரிவித்தனர்.