பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு



பலத்த மழை காரணமாக 17 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தமது திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 62 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. றங்ரேபே நீர்த்தேக்கத்தின் தாழ் நில பகுதியில் மகாவலி கங்கையைப் பயன்படுத்தும் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு ரந்தெனிகல, ரங்ரேபே நீர்த்தேக்கத்தின் பொறுப்பாளரான பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இதன் வான் கதவுகள் திடீர் என திறக்கப்படும் என்பதனால் மகாவலி கங்கையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கக்கூடும். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொறியியலாளர் டி.எம்.தர்மதாஷ அறிவித்துள்ளார். தற்பொழுது நிலவும் கடும் மழையின் காரணமாக பதுளை பிரதேசத்தில் உமா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக ரங்பேரே நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீர் என திறக்கக்கூடும். இந்த பகுதியில் மினிபே, மையங்கனை மற்றும் திருகோணமலை வரையில் மகாவலி கங்கையின் இரு மருங்கிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.