அரசாங்க சேவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்



அரசாங்க சேவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு பொருத்தமான காலத்தில் நாம் தற்பொழுது இருக்கின்றோம்.

அரசியல் சம்பவங்களுக்கு அப்பால் இருப்தற்கும் எம்மால் முடியும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் டபிள்யு ஏ.சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தின் அதிகாரிகளை செயலாளர் இன்று சந்தித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் விருதை பெறும் நிறுவனமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை தரமுயர்த்த முடிந்ததுடன் இதற்கு சரியான எண்ணக்கருவுடனான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் அரச சேவையை முன்னெடுக்க வேண்டிய முறைகள் குறித்து இன்னும் நிறுவன ரீதியிலான வர்த்தமானி அறிவிப்பு இல்லை. இன்று நாம் அமைச்சில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவான தகவல் துறைக்கான திட்டத்தை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் நாம் இதன் போது கவனம் செலுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார். நாம் இதற்காக இலங்கையில் உள்ள ஊடக துறையை சேர்ந்த பல முன்னணியாளர்களை அழைத்து செயல்முறை திட்டம் ஒன்றை வகுப்பதற்கு தீர்மானித்துள்ளளோம். அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து இலங்கையில் ஊடக துறையைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கிய குழு ஒன்றின் மூலம் நடைமுறைத் திட்டத்தை சமர்ப்பித்து அதனை கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிய பசுபிக் வலையத்தில் விருதுகளைப் பெறும் உலகில் துரிதமாக செயற்படும் ஐந்தில் ஒன்றாக வேள்ட் சமிற் விருது கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்தும் நாம் பெற்றுக்கொள்வதற்கு உக்குவிக்கப்படவேண்டும். இது தொடர்பில் தகவல் திணைக்களத்திற்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எம்மிடம் அனைத்து விடயங்கள் தொடர்பான தகவல்களும் இருக்க வேண்டும். அனைத்து பத்திரிகை கலைஞர்களினதும் வாழ்க்கை தொடர்பான தகவல் கட்டமைப்பு ஒன்று வகுக்கப்பட வேண்டும். அவ்வாறான தகவல்கள் இருக்குமாயின் ஊடகவியலாளர்களின் சேமநல பணிகளை முறையாக முன்னெடுக்க முடியும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். அனைத்து ஊடக நிறுவனங்கள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதனை நாம் சிறப்பாக மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் எமது பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யு ஏ.சூளானந்த பெரேரா மேலும் குறிப்பிட்டார்.