மட்டக்களப்பில் பால்நிலை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு!

பால்நிலை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு இன்று (26.12.2019) அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மனித உரிமை ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் திரு.அப்துல் லத்தீப் ஸ்சாடீன் மற்றும் மனிதாபிமானத்திற்கான வாநிலையத்தின் பணிப்பாளர் கே.லவகுகராசா உட்பட பல வளவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில் பட்டதாரி பயலுனர் ஆகிய நீங்கள் அறிவு, திறன், மனப்பாங்கு போன்றவற்றில் வளர்ச்சியடைய வேண்டும் எனவும் மக்களிற்கு சேவை செய்யும் நீங்கள் அவர்களிற்கு திருப்திகரமான வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒரே துறையில் தங்கியிருக்காது தங்களது திறமைகளை விருத்தி செய்யும் வகையில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். அரச தொழிலில் மாத்திரம் செயற்படாமல் சுயதொழில் விருத்தியிலும் அக்கறை செலுத்த வேண்டும் அத்தோடு வாசிப்பு எனும் விடயம் மிகவும் முக்கியமானதாகும் பத்திரிகைகள் ,புத்தகங்கள் வாசிப்பது போன்றவற்றினால் தனிப்பட்ட நபரின் ஆளுமைத்திறன் வளர்ச்சியடையும் எனவும் கூறினார்.