உதவி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்



ஐம்பது ஆயிரம் உதவி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஆசிரிய பிரமாண குறிப்பை மீறும் செயலாகும் இதனை இலங்கை ஆசிரிய சங்கம் வண்மையாக கனடிப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கிறார்.

கடந்த அரசாங்க காலத்தில் பெருந்தோட்ட பகுதி பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதாந்தம் 6000 முதல் 10000 வரையிலான சம்பளம் வழங்கப்பட்டது இதனால் அவர்கள் பெரும் கஷ்டத்தையே அனுபவித்தனர் என்றும் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

50000 ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பது ஆசிரிய பிராமண குறிப்பை மீறும் செயலாகும். ஆசிரிய வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமியுங்கள் அதனை நாங்கள் வரவேற்கிறோம் அதை விடுத்து ஆசிரிய உதவியாளர்களை நியமித்து ஆசிரியர்களுக்கு இருக்கும் மத்திப்பையும் மரியாதையும் களங்கப்படுத்த வேண்டாம். இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதை இலங்கை ஆசிரிய சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.