பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளை இராணுவத்தினரும் முன்னெடுத்து வருகின்றனர்



(வி.சுகிர்தகுமார்) 
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளை இராணுவத்தினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உணவினை இராணுவத்தின் 241ஆம் படைப்பிரிவினர் இன்று வழங்கி வைத்தனர்.

அக்கரைப்பற்று இராணுவ முகாம் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி கேணல் ஜானக விமலரத்ன தலைமையிலான இராணுவத்தினர் இடைத்தங்கல் முகாமிற்கு வருகை தந்து பொதுமக்களுக்கான உணவினை வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து மக்களது தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

நிறைவில் பொதுமக்கள் சார்பில் மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி எஸ்.ரூபி இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பொது மக்களே இவ்வாறு நாவற்காடு நெக்கோட் கட்டடத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் கடந்த 7 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 1120 குடும்பங்களை சேர்ந்த 3920 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.