மட்டக்களப்பு குடியிருப்பு கனிஷட வித்தியாலயத்தில் தரம் - 1 மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு விழா!



மட்டக்களப்பு  குடியிருப்பு கனிஷட வித்தியாலயத்தில் தரம் - 1 மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


தரம் - 1 மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு விழா அதிபர் திரு.வ.கிருபைராஜா தலைமையில் 2020.01.16 காலை 10:00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.சு.குலேந்திரகுமார் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் அவர்களும் சிறப்பு அதிதியாக திரு.G.கிருஸ்ணமூர்த்தி சேர் (PSI)அவர்களும் விசேட அதிதியாக திரு.ப.ரஜிதரன் அவர்களும் அழைப்பு அதிதியாக திரு.ஜெயகோசரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் சின்னஞ்சிறு பாலகர்களை அவர்களுடைய பெற்றோர்கள் பல்லக்கில் சுமந்து கொண்டு வருகை தந்தனர்.

அவர்களை தரம் -2 மாணவர்கள் மாலையணிவித்தும் பூக்கள் தூவியும் வரவேற்க அதிதிகள் அனைத்து மாணவர்களுக்கும் MOUSE கொடுத்து வரவேற்றனர் இந்நிகழ்வில் TVR BROTHARS MARKETING (PVT.LTD) முகாமையாளர் திரு.ப.ரஜிதரன் அவர்களால் 35000.00 செலவில் சுவரோவியங்கள் வரையப்பட்டதை திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

மற்றும் திருமதி.T.தயாளன் ஆசிரியையின் செயற்றிட்டமான 8000.00 ரூபா பெறுமதியான சுவரோவியமும் ஏறாவூர் மக்கள் வங்கி கிளையின் 19800.00 ரூபா செலவில் வரையப்பட்ட சுவரோவியமும் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குடியிருப்பு கிராமத்தில் இருக்கின்ற அரச ஊழியர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது. 

மற்றும் பாடசாலையின் இணையத்தளமும் திறந்து வைக்கப்பட்டது. (www.btkjs.edu.lk) இதில் மாணவர்களின் புள்ளிகள் மற்றும் வினாத்தாள்களை பெற்றோர்கள் வீட்டில் இருந்து கொண்டே பார்வையிடக்கூடிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றும் 8 பண்புத்தரங்களும் அதன் 210 சுட்டிகளையும் இதில் பார்வையிடலாம். பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகள் மற்றும் செயற்றிட்டங்கள் என்பவற்றையும் பார்வையிடலாம். அதனைத்தொடர்ந்து MICROSOFT MOUSE MISCHIEF SOFTWARE ஊடாக கற்பிக்கும் முறையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.