மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா !


(LEON)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் மாவட்ட தைப்பொங்கல் விழாவின் 2020 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.


மாவட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட மாவட்ட பொங்கல் விழாவானது புது நெல் அறுவடை செய்யப்பட்டு மாட்டு வண்டில்களில் பண்பாட்டு பவனியுடன் ஆரம்பிக்கப்பட்டு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

அம்மன் ஆலய முன்றலில் நடைபெறுகின்ற பொங்கல் விழாவில் அரிசி குற்றும் நிகழ்வு பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் ,பாரம்பரிய வாழ்கை முறையினை பிரதி பலிக்கும் வீடுகள் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டு 15 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கி பொங்கல் விழா சிறப்பிக்கப்பட்டன

2020 ஆம் ஆண்டுக்கான மாவட்ட தைப்பொங்கல் விழாவினை சிறப்பிப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளை சேர்ந்த பிரதேசசெயலாளர்கள் , திணைக்களத் தலைவர்கள் ,கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள்,சமூர்த்தி சங்கங்கள் உறுப்பினர்கள் , அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.