இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வாலிபர் முன்னணி தொடர்பான கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட  வாலிபர் முன்னணி தொடர்பான  கலந்துரையாடல் சனிக்கிழமை அன்று காரைதீவில் இடம்பெற்றது .
எதிர்வரும் இரண்டாம் மாதம் இடம்பெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட  வாலிபர் முன்னணி யின் நிர்வாக தெரிவு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

இக் கலந்துரையாடலில்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் , கட்சியின் உறுப்பினர்கள் , இளைஞர்கள் கலந்துகொண்டனர் . 

பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உரையாற்றுகையில் 
உத்தியோகங்கள் ,  அபிவிருத்திகளை  தந்தால்  எங்களது பிரச்சனைகள் முடிந்துவிடும் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம் .  வடகிழக்கு மக்கள் தான் உரிமை சம்பந்தமான பிரச்சனைகளை பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால். ஏனைய ஏழு மாகாணங்களில் இவ்வளவு காலமும் அபிவிருத்தியை செய்திருக்கலாம் தானே ? 
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் மட்டுமே  தர முயர்த்த  முடியும் .   ஆரம்ப கட்ட வேலைகளை    நுணுக்கமான முறையில் கையாண்டிருந்தோம் .   
கல்முனை விவகாரத்தை வைத்து விமர்சனம் செய்து  கொண்டிருக்கின்றனர்.  விமர்சனம் செய்பவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் கூறிய போல் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி இருக்கலாமே என உரையாற்றியிருந்தார் . 

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் உரையாற்றுகையில் .
அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடிக்க பலர் முயன்று வருகின்றனர் .   ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக  இருந்து அம்பாறை மாவட்டத்திற்கான  ஆசனத்தை இழக்க  விடாமல் செயற்படவேண்டும் .   என குறிப்பிட்டார்.