கந்தளாய் பேராத்துப்பாலத்திற்கு கீழ் கழிவுகள் கொட்டப்படுவதால் துர் நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் கோரிக்கை!



(எப்.முபாரக்)
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட முதலாம் குலனியில் அமைந்துள்ள பேராத்துப் பாலத்திற்கு கீழ் கழிவுகள் கொட்டப்படுவதால் துர் நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமும் அதிகாலை வேளையில் பாலத்திற்கு கீழ் குப்பை கூழங்கள் மற்றும் மிருகம் ,விலங்குகளில் கழிவுகளை இனந்தெரியாதோரால் கொண்டு சென்று கொட்டுவதால் வீதியால் செல்லமுடியாது சிரமம் படுவதாக அவ்வீதியால் பயணிப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.

குப்பைகளை கொட்ட எவ்வளவோ இடங்கள் இருந்தும் பாலத்திற்கு கீழ் கொட்டுவதால் அருகாமையில் வசிப்போர் மற்றும் அந்நீரினை பயன்படுத்தி குளிப்போர் என பலரும் அசௌகரியத்திற்குள்ளாவதாகவும் விசனம் தெரிவிப்பதோடு,கழிவுகளை ஆற்றில் வீசுவதை விட நிலத்தில் புதைப்பது மேலானது எனவும் தெரிவிக்கின்றனர்.

இனிமேல் கழிவுகளை கொட்டுவதை நிறுத்தி மாற்று வழிகளை கையாளுமாறும்பிரதேச மக்கள் தெரிவிப்பதோடு,

இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.