நலிவடைந்த பெண்கள் மற்றும் பெண்களை தலைமை தாங்கும் குடும்பங்களில் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் திட்டம் !



(LEON)
நலிவடைந்த பெண்கள் மற்றும் பெண்களை தலைமை தாங்கும் குடும்பங்களில் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் சமூக அவிருத்திகட்சியுடன் இணைந்து சுயதொழில் திட்டத்தினை இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து  வைக்கப்பட்டன .

சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சமூக அவிருத்தி கட்சி இணைந்து  கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் பல வாழ்வாதார அபிவிருத்திக்கு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவாக்கேணி கிராம சேவை பிரிவில் இத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாணவர்களுக்கான புத்தகபைகளும்  வழங்கிவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சமூக அவிருத்தி கட்சி ஏற்பாட்டில் இன்று நடை பெற்ற நிகழ்வில் , சமூக அவிருத்தி கட்சியின் பொதுச் செயலாளர் கே.பிரகாஷ்  சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் கிழக்கு மாகாணதலைவர் ஜோஜ் பிரான்சிஸ்  நாவாக்கேணி கிராம பெண்கள் அபிவிருத்தி  சங்கதலைவி திருமதி .ரூத்பாக்கியசீலன் , சிறுவர்  பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சமூக அவிருத்திகட்சி உறுப்பினர்கள் , பயனாளிகள் கலந்துகொண்டனர்