அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் மற்றும் மருதடி மாணிக்கப்பிள்ளையார், உள்ளிட்ட ஆலயங்களின் தீர்த்தோற்சவ கிரியைகள்!


(வி.சுகிர்தகுமார்)  
மார்கழி மாதத்தில் வரும் திருவெம்பாவையின் தீர்த்தோற்சவ கிரியைகள் இன்று(10) பல்வேறு ஆலயங்களிலும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் மற்றும் மருதடி மாணிக்கப்பிள்ளையார், உள்ளிட்ட ஆலயங்களின் சமுத்திர தீர்தோற்சவம் அக்கரைப்பற்று பகுதி வங்கங்கடலோரத்தில் இடம்பெற்றது.
கடந்த 01 ஆம் திகதி ஆரம்பமான திருவெம்பாவை பூஜைகள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்தன.

இறுதி நாளான இன்று காலை திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் பொற்சுண்ணம் இடிக்கும் கிரியைகளும் இடம்பெற்றது. 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அடியார்கள் புடை சூழ வேதசாஸ்திர மந்திரங்களின் உச்சாடனத்துடன் வீதி வலமாக வங்கக்கடல் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு இடம்பெற்ற அபிசேக பூஜையினை தொடர்ந்து அடியார்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் கடலில் நீராடினார்.

அதனை தொடர்ந்து கூடியிருந்த பெருந்திரளான பக்தர்களும் நீராடியதுடன் விநாயகப்பெருமானின் அருள் வேண்டி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை ஆலயங்கள் யாவும்  விழாக்கோலம் பூண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.