மட்டக்களப்பு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவு திட்டம்!


(leon)
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வசிக்கின்ற மக்களின் சனத்தொகை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவு திட்டத்திற்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு நேற்று  ,மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகருக்குள் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி, மற்றும் கல்விச் செயற்பாடுகளை நோக்காக கொண்டு 2019 ஆம் ஆண்டு முதல் பிரசவிக்கும் மூன்றாவது குழந்தைகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதாக மாநகர முதல்வரால் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் நிறுனங்களின் நிதி பங்களிப்பின் 125 குழந்தைகளுக்கான 5000 ஆயிரம் பெறுமதியான பண வவுச்சர்கள் நேற்று  வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப் கலந்து கொண்டு பண வவுச்சர்களை வழங்கி வைத்தனர்.