அம்பாறை மாவட்டம் உஹன பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!

அம்பாறை மாவட்டம் தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (24) காலை முதல் உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ. அஜந்தகுமாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கே.எம்.கே.எஸ். குலதுங்க ,கணக்காளர் கே.பிரகஸ்பதி கலாச்சார உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

55 கிராமசேவையாளர் பிரிவை கொண்ட தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் நிகழ்வுகள் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் பொங்கல் விழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.