பாடசாலை முப்பெரும் விழா!


(எஸ்.எம்.எ;.முர்ஷித்)
மட்டக்களப்பு மத்திய  கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா வித்தியாலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் யூ.எல்.அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எம்.ஏ.றிஸ்மியா பானு, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், வாழைச்சேனை ஆயிஸா மகா வித்தியாலய அதிபர் எம்.ரி.எம்.பரீட், வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி உட்பட சமூக ஆர்வளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பாடசாலையில் முப்பெரும் விழாவான மூன்றாவது ஆண்டு பரிசளிப்பு விழா, மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதல், ஹைறாத் மலர் வெளியீடு என்பன இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மூன்று மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு பாடசாலை கற்றல் நடவடிக்கை, கற்றல் போட்டிகளில் சிறந்த நிலையை பெற்ற மாணவர்களும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், வீதி போக்குவரத்து மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

ஹைறாத் மலரின் முதல் பிரதி பாடசாலையின் அதிபர் யூ.டில்.அஹமட்டினால் மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எம்.ஏ.றிஸ்மியா பானுவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.