பெரியகல்லாற்றில் தமிழர் பாரம்பரிய கலை கலாசார விளையாட்டு நிகழ்வு!

(இ.சுதாகரன்)
பெரியகல்லாறு சூரியாவிளையாட்டுக் கழகம் ஏற்பாடுசெய்ததமிழர் பாரம்பரியபண்பாட்டு கலை கலாசார விளையாட்டு விழா கழகத்தின் தலைவர் ரீ.பிரதாஸ் தலைமையில் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. 

நிகழ்வில் மட்டுமாவட்டஅரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாகவும். விசேட அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவில் வ.ரெத்தினம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறைத் தலைவர் திருமதி சுஜாறஜனி வரதராஜன் மற்றும் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினாகளான எஸ்.கணேசநாதன் இஎஸ்.குகநாதன் மற்றும் அழைப்பு அதிதிகளாக பெரியகல்லாறு கிராமத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் இந்து  கிறிஸ்தவ தேவாலயங்களின் மத குருமார்கள் ஆலயங்களின் தர்மகர்தாக்கள்  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது தமிழர் பாரம்பரிய கலை கலாசார அம்சங்களை வெளிப்படுத்தக் கூடிய பல விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.