மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளுடைய நெற்களை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல்!

(LEON)
2019 - 2020 பெரும்போக வேளாண்மை அறுவடை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளுடைய நெற்களை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று மலை நடைபெற்றது . 

இதன் போது ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற உள்ள கலந்துரையாடல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நெல்லை கொள்வனவு செய்யும் களஞ்சிய சாலை உரிமையாளர்கள் ,அரிசி ஆலை முகாமையாளர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

நெல்லை கொள்வனவு செய்து அவற்றினை பாதுகாப்பது வைத்திருப்பதற்கான அந்த வங்கியில் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பாக அவற்றினுடைய வட்டிவீதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

அரிசி ஆலை முகாமையாளர்கள் அவர்களால் கொள்வனவு செய்யப்படக்கூடிய அளவான நெல் அளவு சம்பந்தமாகவும் அதேபோல அவர்கள் இந்த மாவட்டத்தில் இன்று நெல் விலை எவ்வளவு அவர்கள் களஞ்சியத்தில் வைத்திருப்பார்கள் என்பது தொடர்பான விபரங்கள் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு பெறப்பட்டது

எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொள்வதற்கான அரசு திட்டம் ஒன்றினை அனுமதிக்கப்படும் என எதிர்பார்த்து அவற்றுக்குத் தேவையான தரவுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசாங்க அரசாங்க அதிபர் தெரிவித்தார் .