மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு-2020


[Narthanan.R]

கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு-2020.  இப்புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. இம்முறை எட்டாவது(08) வருடமாக இவ்வருடம் நடைபெற்றது. இதன் எட்டாவது(08) வருட நிகழ்வு சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் திரு.சோ.சிவலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள்  தேசிய பாடசாலையின்  மண்டபத்தில் நேற்றைய தினம்  16.02.2020 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை 9.00 மணியளவில்  நடைபெற்றது .
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக லண்டன்-ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவர், சட்டத்தரணி து.ரெட்ணசிங்கம் அவர்களும், லண்டன் லூசியம் சிவன் கோவில் பொருளாளரும் சங்காரவேல் பவுண்டேசன் ஸ்தபாகருமான கணக்காளர் சங்காரவேல் சுகுமார் , கிழக்கு மாகாணத்திற்கான ஓய்வு நிலை மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் அவர்களும், ஈச்சிலம்பற்று, ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.வெற்றிவேல் அவர்களும், பொத்துவில் தமிழ்ப்பிரிவிற்கான ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வ.ஜயந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் K.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் K.பாஸ்கரன் லண்டன்-ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலய சிங்காரவடிவேல், லண்டன்-ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயத்தின் உறுப்பினர்  , மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்ட அனைவரக்கும், 'சங்காரவேல் பவுண்டேசன்' அமைப்பினரால் அவர்களது சமூகப்பணி, கல்விப்பணி போன்றவற்றைப் பாராட்டிக் கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதுவரை இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கு 75 பேர் உள்வாங்கப்பட்டதுடன் மேலும் தற்போது 56 பல்கலைக்கழக மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுகின்றார்கள். இவர்களில் 11 பேர்  தமது கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததுடன் இவற்றுள் 9 பேர் பொயியலாளர்களாக
 தற்போது தொழில் புரிகின்றார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். இவர்களுக்கு மருத்துவத்துறைக்கு மாதாந்தம் 8000.00 யும், பொறியியல்துறைக்கும் சட்டத்துறைக்கும் மாதாந்தம் 7000.00 யும் அவர்களது கல்வி நடவடிக்கைகள் முடியும் வரைக்கும் இப்புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. 

இவ்வருடம் பன்னிரண்டு மாணவர்கள் புலைமைப்பரிசில்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.



 இவ் வருட புலமைப்பரிசில் இற்கு அனுசரணை வழங்குவோர்
* சிவகாமி FOUNDATION லண்டன் 
    (திரு. ச. பரமேஸ்வரன்) (திருமதி. ச. வனஜா பரமேஸ்வரன் குடும்பம்)
* திரு. திருமதி. ரெட்ணசிங்ககம் குடும்பம் லண்டன் 
    முன்னாள் தலைவர், ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயம் லண்டன் 
* திரு திருமதி நிர்மலன் வோஜினி 
    ரெயின்போ FOUNDATION லண்டன் 
* திரு திருமதி நந்தகுமார் 
   SUNSHINE மட்டக்களப்பு 
*  திருமதி  தனுஜா சோமஸ்கந்தன்   அவுஸ்திரேலியா 
* சங்காரவேல் FOUNDATION லண்டன்