களுவாஞ்சிக்குடி மாங்காடு கிராம சேவகர் பிரிவில் மியோவாக்கி முறை காடு வளர்ப்பு திட்டம்- 3ம் கட்டம் முன்னெடுப்பு.


இந்த நாட்டில் இயற்கையுடன் கூடிய சூழலை எதிர்கால சமூகத்திற்கு வழங்கும் வகையில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்கால சமூகத்தினை கொண்டுசெல்லும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மியோவாக்கி என்னும் விஞ்ஞானியினால் முன்னெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தினை முன்னோடியாக கொண்டு  முதன்முறையாக களுவாஞ்சிக்குடி வடக்கு 1 மற்றும் களுவாஞ்சிக்குடி தெற்கு கிராம சேவகர் பிரிவுகளில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  • குறுகிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்கும் ஒரு அற்புதமான செயற்பாடு.
  • இயற்கையின் படைப்பில் மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் போட்டி, பொறாமை போன்ற குணங்களை விடுத்து ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச் செய்யும். இவ் அற்புதத்தை இங்கு காணலாம்.
இதனடிப்படையில் மியோவாக்கி முறை காடு வளர்ப்பு திட்டத்தின் 3ம் கட்டமானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம்  தலைமையில் மாங்காடு கிராம  சேவையாளர் பிரிவில் 17.02.2020 இன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இதன்போது சூழலுக்கு பாதுகாப்பினை அளிக்கும் பல்வேறு மரங்கள் நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் நடப்பட்டது. குறுகிய நிலப்பரப்பிற்குள் அடந்த காட்டினை உருவாக்கும் வகையிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது