ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களுக்கு பயிலுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பின் பிரிவுகளிலுமிருந்து 766 விண்ணப்படிவங்கள் !

(வி.சுகிர்தகுமார்)  
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைய பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களுக்கு பயிலுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை நாடயாளவீய ரீதியில் இன்று(26) முதல் ஆரம்பமாகியது.இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் நேர்முகப்பரீட்சைகள் பிரதேச செயலாளர் கே.லவநாதனின் வழிகாட்டலில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

ஆலையடிவேம்பின் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமிருந்து 766 விண்ணப்படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இன்றுமுதல் தொடர்ந்த நான்கு நாட்களுக்கு இந்நேர்முகப்பரீட்சைகள் கட்டம் கட்டமாக இடம்பெறவுள்ளன.

நேர்முகப்பரீட்சார்த்திகள் 11 விடயங்கள் தொடர்பான ஆவணங்களுடன்; குறைபாடின்றி மூலப்பிரதிகளுக்கு மேலதிகமாக நகல் பிரதியினையும் தம்வசம் வைத்திருத்தில் அவசியம் எனவும் அறிவுறுத்தல் முன்னதாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஆரம்பமான நேர்முகப்பரீட்சையினை பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையிலான இராணுவ உயர் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.