கிழக்கு மாகாணத்து மக்களின் தேவை என்பது அரசியல் கட்சியின் பலத்தினை நிருபிப்பதற்கான போட்டியல்ல - பூ.பிரசாந்தன்

--கனகராசா சரவணன்--
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் நாடாளமன்ற தேர்தல் கிழக்கு தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படும் இடத்து தமிழர்களின் பிரதிநிதித்துவம் கேள்ளிக்குறியாகி போகும் சூழல் இருக்கின்றது எனவே தமிழர்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் அதற்கு ஒரே கூரையில் எல்லோரும் சேர்ந்து செயற்படவேண்டும். என தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்

தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இவ்வாறு தெரிவித்தார்

கிழக்கு தமிழ் மக்களின் இந்நிலையினை ஆராய்ந்து பரந்துவபட்ட எமது சமூகத்தின் சமூக அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகசமூகம் , சிவில் அமைப்புக்கள், உட்பட எல்லா தரப்பினரிடம் ஆராயந்து இறுக்கமான தீர்மானத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வந்திருக்கின்றது.

இந்நிலையில் மாகாணத்தில் தமிழர்களின் நிலைபேறான ஆளுமை மிக்க அதிகாரத்தை உறுதிப்படுத்தி பயணிப்பமற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்திலுள்ள தேர்தலில் களமிறங்க இருக்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒரே கூரையின்கீழ் இணைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு ஜக்கிய முன்னணியில் பயணிப்பதற்காக கடந்த காலங்களில் நாங்கள் மேற்கொண்டு வந்தோம்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்பு, கிழக்கு தமிழர் ஒன்றியம், முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் தமிழர் சமூக ஜக்கிய கட்சி, அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தமிழர் முற்போக்கு அமைப்பு, முன்னாள் அமைச்சர் கருணா அம்மானின் கட்சியான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி ,

முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி கட்சியான முன்னாள் நாடாள மன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான நா. கிருஷ;னபிள்ளை (வெள்ளிமலை) மாவட்ட சிவில் அமைப்புக்கள், ஆலைய நிர்வாகிகள் , வர்த்தக சங்கங்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் உத்தியோக பூர்வமாகவும் சினேகித பூர்வமாக கலந்துரையாடலை மேற்கொண்டு நடைபெற இருக்கின்ற நாடாளமன்ற தேர்தலில்.


எவ்வாறு கிழக்கில் இருக்கின்ற அனைவரும் கிழக்கு மண்ணை பாதுகாப்பதற்கும்; மக்களின் அதிகார மையங்களை பெற்று மக்களுக்கான எதிர்கால்தை வழிநடத்துவதற்காகவும் ஒரே கூரையின் கீழ் பொதுவாக எல்லோரும் சேர்ந்து பயணிப்பது தொடர்பாக ஆராய்ந்திருந்தோம் அதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கின்றோம். அதனடிப்படையில் எந்த சின்னத்தில் எவ்வாறு அமைக்கப்படுகின்ற ஒன்றினைவு தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது மிக விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். கிழக்கின் இன்றைய தேவையும் நிலமையும் அதுவாகவே இருக்கின்றது

கிழக்கு மாகாணத்தின் நிலமையுடன் வடக்கு மாகாணத்தை ஒப்பீட்டு பார்ப்பது பெருத்தமாக இருக்காது முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபையை பெறுப்பெடுத்தபோது எல்லோரும் விமர்சித்தனர். ஆனால் மாகாணசபையை சிறப்பாக வழிநடத்தி 2012 வரை சிறந்த முதலமைச்சராக வழிநடாத்தி காட்டியிருந்தார். ஆனால் இதேபோன்று வடக்கு மாகாணத்தில் சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக இருந்தார். அவர்களுக்கான அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கடந்த தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதனால் தமிழர்களின் வாக்குகளினால்; ஏனைய அரசியல்தலைவர்கள் உள்நுழைந்து அதிகாரத்தை பெற்று தமிழர்களின் இருப்பினையும் இல்லாமல் செய்த வரலாறு அதனை உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவ்வாறான நிலமை ஏற்படக் கூடாது அதற்காக எல்லோரும் சேர்ந்து பயணிக்க வேண்டும.

கிழக்கில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டும் கடந்த 2010 ம்; ஆண்டு தனித்து நாடாளமன்ற தேர்தலில் போட்டியிட்டோம் என் என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் தனித்து போட்டியிட்டிருந்தோம் அதனால் 3 நாடாளமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் காரணமாக இருந்தோம்.  அதனடிப்படையில் பொதுஜன பெரமுனையுடன் தொடாந்து இனக்க அரசியல் செய்பவர்கள் என்ற அடிப்படையில் பிரதமர் மதிந்த ராஜபஷவிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாக தெரிவித்துள்ளோம் எனவே அவர்கள் எமக்கு சாதகமான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது

அந்த கட்சிக்கு சவாலாக இருக்கபோறோம் என்ற அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர் அறிக்கை விடுகின் செயற்பாடு செய்பவர்கள் நாங்கள் அல்ல எந்த தேவைக்காக மக்கள் வாக்களிக்கின்றார்களே அந்த தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் கிழக்கு மாகாணத்து மக்களின் தேவை என்பது இரண்டு அல்லது மூன்று அரசியல் கட்சியின் பலத்தினை நிருபிப்பதற்கான போட்டியல்ல.

மக்களின் அடிப்படை பிரச்சனை வேறு நிலம், நிர்வாக ரீதியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் பெருளாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழலில் அரசியல் கட்சிகள் சவாலாக அமையும் என்பதல்ல வருகின்ற தேர்தலில் கிழக்கு மாகாண மக்களின் தீர்மானம் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்காலத்துக்கு சவாலாக அமைக் கூடாது என்பதனை உணர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எல்லாக் கட்சிகளையும் ஒன்றினைத்து பயணிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது அதனை ஏற்றுக் கொண்டு பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்