கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் !


(பாறுக் ஷிஹான்)
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (12) நடைபெற்றது. இதன் போது 2020/2021 ஆண்டுக்கான நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதுடன் இதன் படி சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி எம்.சாரிக் காரியப்பர் தெரிவானார்.

தொடர்ந்து செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத்தும் பொருளாளராக சட்டத்தரணி என்.ஏ.எம்.அசாமும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.