மண்டூர் இல் இறந்தும் வாழும் மனிதனின் பெயரால் கல்விப் பணி ஆரம்பம் !

சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கல்விப்பணியின் ஒரு கட்டமாக எல்லைப்புற கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் ஒரு பாடசாலையை மையப்படுத்தி அதன்
அருகில் உள்ள பாடசாலைகளை ஒன்றிணைத்து  9 10 11 ஆம் தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்பக்கள் நடாத்தப்பட்டு பட்டுக் கொண்டு வருகின்றது.
இதன் மூலம் உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களை கற்க ஊக்குவிப்பதனுடாக பொறியியலாளர், வைத்தியர், தொழிநுட்பவியலாளர், மற்றும் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோரை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயத்தின் போரதீவுக் கோட்டத்தில் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் பங்களிப்புடன் கணேசபுரம் சக்தி மகா வித்தியாலயத்தில் 07.02.2020 அன்று அப்பாடசாலையின் அதிபர் அவர்களின் தலைமையில் இப்பிரத்தியேக வகுப்பு அங்குரார்ப்பண நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் , விசேட அதிதியாக முன்னாள் பட்டிருப்பு தொகுதி கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.பூ.கணேசலிங்கம் அவர்களின் புதல்வர்  திரு.க.முகுந்தன் ஆகியோர் கலந்து

சிறப்பித்ததோடு, சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு.ச.சுகுமார், இவ்வமைப்பின் தலைவர் திரு.சோ. சிவலிங்கம், பட்டிருப்பு வலய தமிழ் பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ந.நேசகஜேந்திரன், போரதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர்
திரு.த.அருள்ராஜா, இவ்வமைப்பின் பொருளாளர் திரு.ந.குபேந்திரராஜா மற்றும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் பாடசாலைகளின் அதிபர்கள், இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அவர்களின் பெற றோர்கள், போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

விசேட அதிதியாகக் கலந்து கொண்ட கணேசலிங்கம் முகுந்தன் கருத்து தெரிவிக்கும் போது தனது தந்தையின் பெயரில் இக்கிராமம் இருப்பதையும், எனது தந்தை எல்லைக் கிராமங்களைப்  பாதுகாப்பதில் தன்னாலான சகலதையும் செய்திருக்கின்றார் என்பதையும் எண்ணிப் பெருமையடைகின்றேன். அத்துடன் எனது தந்தையின் வழியில் எங்களது குடும்பமும் இக்கிராமங்களின் கல்வி வளர்ச்சியிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் எதிர்வரும் காலங்களில் பங்களிப்புச் செய்யும் என்பதையும் கூறி நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்பகுதிகளுக்கு வருகை
தர இறைவன் வழி அமைத்துக் கொடுத்தற்காக இறைவனுக்கும் நன்றி கூறி தனது கருத்துரையை முடித்தார்.

தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் கருத ;துத் தெரிவிக்கும் போது பட்டிருப்புப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கம் அவர்களின் பெயர் கொண்டு காணப்படும் இக்கிராமத்தில் கல்விப்
பணியைத் தொடங்குவதற்கு என்னைப் பிரதம அதிதியாக அழைத்தமைக்காக அன்னாரின் குடும்பத்தினருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எமது மண்ணினதும் மக்களினதும், இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மிகவும் இக்கட்டான கால கட்டத்தில் இவ்விடங்களைப் பலப்படுத்தியமையை எண்ணிப் பெருமையடைகின்றேன். அமரர் பூ.கணேசலிங்கத்தைப் போன்று அவரது சகோதரர் அமரர் பூ. சங்காரவேல் அவர்களும் இப்பணியில் முன்னின்று உழைத்தமைக்குச் சான்றாக கணேசபுரம், சங்கர்புரம் என
இக்கிராமங்களுக்கு பெயர் வைத்து இவர்களைப் போன்றுகின்றார்கள் என்றால், இவர்களின் தூரநோக்கு மதிப்பிட முடியாதது என்றார்.

அவர்களின் வழியில் பிள்ளைகளும் கல்வியே எமது இனத்தை இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள ஒரே மார்க்கம் என்பதை உணர்ந்து இப்பிரத்தியேக வகுப்பை தங்களின் சொந்த நிதியில் தொடங்குகின்றார்கள் இதனைப் பயன்படுத்தும் மாணவர்களும் அவர்களின் குறிக்கோளை அடைய தங்களால் இயன்ற சகல முயற்சிகளையும்மேற்கொண்டு கல்வியில் அதி உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையைநிறைவு செய்தார்.

தொடர்ந்து பாடசாலை அதிபர் கருத்துரைக்கும் போது இதனை எமது சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் இதற்காக நிதியுதவி வழங்கும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாதாபகர் திரு. ச. சுகுமார் அவர்களுக்கும் நன்றி கூறி தனது கருத்துரையை முடித்தார்.