டெங்கை கட்டுப்படுத்த பெரியகல்லாற்றில் களத்தில் பிரதேச செயலக விசேட செயலணி !

பெரியகல்லாற்றில் இன்று (11) மண்முனை தென் எருவில் பிரதேச செயலக டெங்கு கட்டுப்பாட்டு செயலணி டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை இனங்காணும்; நடவடிக்கைகளை முன்னெடுத்தது.இந்த செயலணியில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம எத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து குழுக்களாக பிரிந்து வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற் கொண்டனர்.

களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார அதிகாரி டாக்டர் கிருஸ்ணகுமார் மற்றும் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம ஆகியோரின் வழிகாட்டல்களுக்கமைய சிறப்பாக இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பிராந்திய சுகாதார அதிகாரி டாக்டர் கிருஜ்ணகுமாரிடம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

ஒரு கிராமத்தில் ஒருவருக்க டெங்கு நோய் அடையாளப்படுத்தபட்டு, அல்லது சந்தேகப்பட்டு சிகிச்சைக்க உள்ளாக்கப்பட்டிருந்தால், நாம் உடனடியாக அப்பிரதேசத்தில் ஏனையோருக்கு டெங்கு பரவிவிடக் கூடாதென்பதற்காகவே நாம் இத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம். எனவே இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இத ஒரு வழமையான முன் எச்சரிக்கையுடன் எடுக்கும் நடவடிக்கை

அத்துடன் இந்த கிராமத்தில் டெங்கு முற்று முழுமையாக பரவி விட்டது என்றும் அர்த்தம் கொள்ளக் கூடாது. ஓரிருவருக்கு டெங்கு என உறுதிப்படுத்தப்பட்டதாலேயே அது எனையோருக்கும் பரவுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாதென்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம்;. தற்போது மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பெரியகல்லாறு ஆகிய இரு இடங்களை அடையாளப்படுத்தியே இத்தகைய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேபோல் முன்பு தறைநீலாவணை களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டு எமது இத்தகைய துரித நடவடிக்கைளால் அப்பிரதேசங்களில் டெங்கை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விட்டோம். இவ்விடயத்தில் பொது மக்களின் உதவியும் ஒத்தழைப்புமே எமக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.