பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பாரம்பரிய பொங்கல் விழா !

(எஸ்.கார்த்திகேசு)
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழர் பாரம்பரிய முறையிலான மாபெரும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வுகளும் மிகவும் விமர்சியான முறையில் பொத்துவில் ஊறணியில் இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்வுகள் பொத்துவில் பிரதேச செயலக கலாசார உதியோகத்தர் எஸ்.நீலேந்திரன் தலைமையில் பொத்துவில் ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்று இருந்ததுடன் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.

இவ் பொங்கல் விழாவானது பொத்துவில் பிரதேச செயலகம் இந்து ஆலயங்கள் சமூர்த்தி சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் போன்ற வற்றின் பங்களிப்புடன் 35 அலங்கரிக்கப்பட்ட மண்பானைகள் வைத்து பொங்கல் விழா இடம்பெற்று இருந்தன.

இதன் போது ஆரம்ப நிகழ்வாக ஊறணி விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைகள் எடுத்து நந்திக் கொடிகள் ஏந்தியவாறு வீதி ஊர்வலமாக மக்கள் வருகைதந்து ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் நந்திக் கொடி எற்றல் மற்றும் மங்கள விளக்கு ஏற்றலுடன் விழா ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து அடுப்பு மூட்டுதல் பொங்கல் பானை அடுப்பில் வைத்தல் பால் ஊற்றுதல் போன்ற சம்பிரதாய நிகழ்வுகள் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்று பொங்கல் பொங்கப்பட்டு விநாயகர் சூரிய பகவானுக்கு குருமார்களால் பூஜைகள் இடம்பெற்று இருந்தன.

இதன்போது இங்கு அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நாட்டியம் மற்றும் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்று மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இவ் தைப் பொங்கல் விழாவில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் பி.பார்த்தீபன் பிரதேசசபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலாசார உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்து ஆலயங்களின் நிருவாகிகள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.