அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா கணபதி ஹோம யாக வேள்வி விஞ்ஞாபனம் பூஜை !


(LEON)
மகா கணபதி ஹோம யாக வேள்வி விஞ்ஞாபனம் பூஜை மட்டக்களப்பு
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை நடைபெற்றது
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஐந்து நாட்கள் தினமும் அதிகாலை மற்றும்
மாலையில் பஞ்ச விஞ்சதி கலச 25 கும்பம் அபிஷேகமும் தொடர்ந்து மந்திர
கல்ப மகாயாக வேள்வி விஞ்ஞாபனம் மகா கணபதி ஹோம யாக மூல மந்திர
திரிசதி அர்ச்சனை யாக பூஜை , சாதகலச பூஜை , அக்கினி பூஜை , விசேட
திரவிய ஹோமம் , வேத திருமுறை , பாராயணம் ஆசிர்வாதம் என விசேட
பூஜைகள் நடைபெறவுள்ளது.

இதன் முதல் நாளான இன்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தர ராஜன்
குருக்கள் தலைமையில் சத கலச 25 கும்பம் மந்திர கல்ப மகாயாக வேள்வி
விஞ்ஞாபனம் மகா கணபதி ஹோம யாக பூஜை ஆலயத்தில் நடைபெற்றது
இந்த விசேட மகா யாக பூஜையில் பெருமளவான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.