இனி இந்த நாட்டின் முஸ்லீம்களுடைய தேசிய தலைவர் பசீர் சேவூதாத் - எம்.எஸ்.எம்.சியாட்


(கனகராசா சரவணன்)

இந்த நாட்டிலே கடந்த காலத்தில் முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம்களை ஏமாற்றிய மாதிரி தமிழ் மக்களை இரா.சம்மந்தன் ஏமாற்றிவருகின்றார் எனவே இனி இந்த நாட்டின் முஸ்லீம்களுடைய தேசிய தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசீர்சேவூதாத்தான். என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன் திருட்டுப் பிரச்சினை குறைவடைந்துள்ளதையடுத்து ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் காத்தான்குடி பூநொச்சிமுனை மீனவர் சங்கத்தின் தலைவர் யூ.எச்.முகைதீன் பாவா தலைமையில் பூநொச்சிமுனை மீனவர் சங்க கட்டிடத்தில் சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருடப்பட்டு வருவதாக என்து கவனத்திற்கு கடந்த மாதம் மீனவர்கள் கொண்டு வந்தனர். இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
இதன் பிரகாரம் உடனடியாக நடவடிக்கை காரணமாக 50 வீதமான இந்த மீன் திருட்டு; தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது இந்த பிரச்சனைக்கு கடந்த 5 வருடங்களாக இன்று மூவின மக்களும் பவல்வேறு கஷ;டங்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதார தொழிலான மீன் பிடி தொழிலை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் றவூப் ஹக்கீம் , முன்னாள் அமைச்சர் றிசாட் பதூர்தீன் முஸ்லீம்களுடைய தேவைகள் .பிரச்சனைகள் இருந்தும் அது தொடர்;பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சியில் எந்த திருடர்களுக்கும் இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்த அடிப்படையில் எந்த திருடர்களுக்கும் இனி எந்த உறுதுனையும் கொடுக்க மாட்டோம். அதேவேளை இன்று ஜனாதிபதியின் ஆட்சியை எல்லா மக்களும் விரும்புகின்றனர்


எனவே ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்றதையடுத்து அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள் மூலமாக மீன் திருட்டு செயற்பாடுகள் தற்போது குறைவடைந்துள்ளது. எனவே பயப்பிடாது நீங்கள் ஆழ்கடல் மீன் பிடியை மேற்கொள்ளவும் என அவர் தெரிவித்தார்

இதன்போது மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முன்னாள் நகர சபை உறுப்பனரும் மட்டக்களப்பு மாவட்ட சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.சியாட் ஆழ்கடலில் மீன் திருட்டுப் பிரச்சினை தொடர்பாக, ஜனாதிபதி பிரதமர் கவனத்திற்கு கொண்டு வந்து எடுத்துள்ளமைக்கு ஆழ்கடல் மீனவர்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.