தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்

(பாறுக் ஷிஹான்)
தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும் எனவும் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(16) மதியம் மாற்றுகட்சிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வமாக தேசிய காங்கிரஸில் இணையும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலும் சாய்ந்தமருதுக்கு நகர சபை கிடைக்கவேண்டும் என்ற விடயத்திலும் தமிழ் சகோதரர்களும் முஸ்லிம் சகோதரர்களும் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய சிங்கள அரசியல் பிரமுகர்களும் அலரிமாளிகையில் கூறியிருந்தோம்.தமிழர்களுக்கு தேவையானது உள்ளூராட்சி சபை அது ஏற்கனவே இருந்திருக்கிறது பிரதேச செயலகம் தான் வேண்டும் சென்றிருக்கிறார்கள் அங்கு இருக்கிறது . எல்லை பிரச்சனை சாய்ந்தமருது விடயத்தில் அங்கு எல்லைப் பிரச்சினை இருக்கவில்லை எல்லை பிரச்சினை இருப்பது 3 சபைகள் உள்ள இடத்தில். இந்த மூன்று சபைகளுக்கும் ஆன எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதும் 4 பிரதேச செயலகங்கள் உருவாகும் என்று அந்தக் கருத்தினை அங்கு எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடிவேம்பு ஒருநாளும் பிரிக்க முடியாத சபையாக இருந்தது திருச்செல்வம் அவர்கள் உள்ளூராட்சி சபையின் அமைச்சராக இருந்தபோதும் அக்கரைப்பற்றில் இருந்து அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று இருந்து ஆலையடிவேம்பு மீதி இருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் அரசியல்ரீதியாக பாராளுமன்றத்தில் கூறியபோது திருச்செல்வம் அக்கரைப்பற்று மண்ணுக்கு வந்து இந்த மண்ணை பார்வையிட்ட பின்னர் இது பிரிக்க முடியாத ஒன்று பிரித்தால் இரத்த ஆறு ஓடும் இன்று பாராளுமன்ற குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஆளுமை மிக்க தமிழ் தலைவர்கள் வழிகாட்டி அந்த வழியில் தேசிய காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் அவற்றை நாங்கள் தெளிவாக கொடுப்பதற்கும் பக்குவமாக முறையான கட்டடங்களை கொடுத்து சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கின்ற மனநிலையோடு தான் நாங்கள் இருக்கின்றோம்.

இது தொடர்பாக கருணா அம்மான் தெரிவித்த கருத்து பெருந்தன்மையான ஒரு விடயம் சாய்ந்தமருது மக்களுக்கு நகர சேவை கிடைத்துவிட்டது ஆகவே எங்களுக்கும் கிடைத்துவிடும். நான்கு சபைகள் உருவானால் நான்கு தலைவர்கள் உருவாகுவார்கள்.கல்முனை தமிழர்களுக்கு இதுவரைக்கும் ஒரு தலைவர் இல்லை அங்கு ஒரு சபை உருவானால் அங்கு ஒரு தலைவர் இருப்பார் அவர்களுக்கு நகரசபை தலைவர் உருவானால் அவர்களுக்கு ஒரு பெருமை இருக்கும் அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பார்.

மருதமுனையில் வழிநடத்த அங்கு ஒரு தலைவர் இல்லை சாய்ந்தமருது வழிநடத்த ஒரு தலைவர் இல்லை கல்முனை முஸ்லிம்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லை ஆகவே கருணா அம்மான் கூறிய விடயம் ஒரு இயற்கையான விடயம் சாய்ந்தமருது மக்களுக்கு சபையும் அபிவிருத்தியும் கிடைத்துவிட்டது ஆகவே எங்களுக்கு கிடைத்துவிடும்.சாய்ந்தமருது மக்களுக்கு நகர சபையை பெற்றுக் கொடுத்து விட்டு நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெரியதாக எனக்குச் சொன்னார்கள் அதில் எனக்கு பெருமை இல்லை. எங்களுக்கு இருக்கின்ற மிகவும் சவாலான பணி மற்றைய மூன்று சபைகளையும் அமைத்து அந்த மக்களை வாழ வைப்பதற்கு.

இரண்டு ஆண்டுகளில் கல்முனை நகர சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சாய்ந்தமருது நகர சபை கிடைக்கப்பெறும் வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஏனைய மூன்று சபைகளையும் தயார்படுத்தி பெற்றுக்கொடுக்க வேண்டிய அந்த எல்லைகளை தீர்மானித்து அந்த எல்லைகளை தீர்மானிக்கின்ற விடயங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் நாமும் நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் யுத்தம் செய்வதற்காக அல்ல வாழ்வதற்காக வாழ்வதே எல்லை ஆகவே எல்லைப் பிரச்சனையில் யுத்தங்கள் இடம்பெறும் என்று எந்த அரசியல்வாதியும் பிழையான கருத்துக்களை முன் வைக்க தேவையில்லை.

ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என எல்லோரும் ஒரு தரப்பில் இருக்கும் போதும் அந்த எல்லைகளை தீர்மானித்து பிரித்துக் கொடுக்க முடியாமல் தோசை சுடுவது போல் மாறி மாறி கணக்காளரை போட்டு விட்டோம் என்று ஒரு தரப்பினரும் அதை தடுத்து நிறுத்தி விட்டோம் என்று மறு தரப்பினர் இதோ வர்த்தகமானி அறிக்கை வருகிறது என்று ஒரு பக்கம் இலங்கை அரசாங்கம் உருவாக்கிய நாளிலிருந்து வழக்கமான அறிக்கை வந்து கொண்டுதான் இருக்கிறது.


சாதாரண ஒரு மின்கம்பத்தை நட்டு விட்டு இதோ எங்கள் தலைவர் திறந்து வைத்தார் என்று கூறும் காலத்தில் 30 வருட சாய்ந்தமருது மக்களின் கொண்டாட்டத்தில் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு இருக்கின்றோம் இதுதான் எங்கள் அரசியல். நமது அரசியல் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.சாய்ந்தமருது பிரிப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி கல்முனையில் தமிழ் மக்களையும் வாழவைக்க வேண்டும் மக்களை ஏமாற்றி பிழைத்து வரும் வியாக்கியானங்களை கூறுபவர்கள் சத்தியத்திற்கு எதிராக நடந்தால் பொறியில் விழுவார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் சாய்ந்தமருதுக்கு சபையை கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லை . ஆனால் எங்களுக்கு பிரதேச செயலகத்தை தாருங்கள் என்று கூறுகிறார்கள் அதில் எந்த குறையும் இல்லை பிரதேச செயலகம் ஒன்றுதான் கல்முனையில் இருந்தது உள்ளுராட்சி சபைகள் தான் இருந்தது அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டு அந்த மண்ணிலேயே சந்தோஷமாக வாழ வேண்டும் தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்ற பேதங்களுக்கு அப்பால் நாங்க வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைமை.சில ஊடகங்கள் சாய்ந்தமருதுக்கு சபை கொடுத்ததை ஈழம் கொடுத்தது போன்று சஹ்ரானுக்கு இடம் கொடுத்தது போன்று தான். அப்படிச் சொன்னாலும் சஹ்ரானுக்கு இடம் கொடுத்து காட்டிக்கொடுத்ததும் சாய்ந்தமருது மக்கள் தான் .ஆனால் உண்மை அதுவல்ல என்றார்.