பதுளை எட்டம்பிட்டிய நீர் விநியோகத்திட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் திறந்துவைப்பு


(நதீபன்)

உழைக்கும் நாடு - புதியதோர் இலங்கைக்கான வெற்றிகரமான தொலைநோக்கிற்ப பதுளை ஹாலிஎல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீரினை வழங்கும் நோக்கில் எட்டம்பிட்டிய நீர் விநியோகத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பொதுமக்களிடம் இன்று (17)கையளிக்கப்பட்டது. 

இத்திட்டமானது இலங்கை அரசினது நிதியுதவியினால் 2,240 மில்லியன் ரூபா செலவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினது வழிகாட்டலில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது இத்திட்டமானது சுமார் மூன்று வருடங்களை கொண்ட செயல்திட்டமாக இருப்பினும்  செயல் திட்ட பணிப்பாளர் எந்திரி. றுவான் லியனகேயின் மேற்பார்வையில் ஆறு மாதங்கள் முன்னதாகவே பூர்தியடந்துள்ளது சிறப்பம்சமாகும்

ஊவா மகவெல்கம, நெலுதண்ட, தெஹிவின்ன, ஹின்னாராங்கொள்ள உள்ளிட்ட 12 கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதன் மூலம் நன்மையடைவர். இதன் முதல் கட்டத்தில் மூவாயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதுடன். இரண்டாம் கட்டத்தில் மேலும் மூவாயிரம் பேருக்கு குடிநீர் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா , பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ,ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே , முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ,அமைச்சின் செயலாளர் ,சபை தலைவர் , பொதுமுகாமையாளர் , நீர் வழங்கல் வடிகலைமைப்பு சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் 
.