ஏறாவூர் வாகன விபத்தில் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் படுகாயம் !


கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர்ப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை 10.02.2020 காலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் சுங்கான்கேணி வாழைச்சேனை எனும் விலாசத்தைக் கொண்ட விஜயரட்ணம் ரமேஷ் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
அதிவேகமாக வந்த இவரது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் மஞ்சள் கடவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்தவர் உதவிக்கு விரைந்தோரால்  முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம்பற்றி ஏறாவூர் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.