உப்போடை தூய லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது !

(லியோன்)
மட்டக்களப்பு பார் வீதி பெரிய உப்போடை தூய லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு பார்வீதி பெரியஉப்போடை தூய லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா இன்று அருட்தந்தை ஜேம்ஸ் தலைமையில் பங்குத்தந்தை ரிஜெட் அடிகளர் மற்றும்
அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புகொடுத்தனர்.ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த 7ஆம் திகதி பங்குதந்தை தலைமையில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை அருளுரைகளுடன் திருப்பலிகள் இடம்பெற்றது. நேற்று மாலை நடைபெற்ற அன்னையின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் இடம்பெற்றது.

ஆலய வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலி இன்று நடைபெற்றது. திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஆராதனை வழிபாடுகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய திருவிழா நிறைவுபெற்றது. திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள பங்கு அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறை மாவட்ட பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.