இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 100 ஆனது

இலங்கையில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது .

வைரஸ் தொற்றியுள்ள சந்தேகத்தின் பேரில் 229பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மொத்தமாக இதுவரை நூறு நோயாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டனர் .இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.98 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.