ஊரடங்கின்போது வீதியில் சுற்றித்திரிந்த குற்றச்சாட்டில் 2405 பேர் கைது !

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 646 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வௌ்ளிக்கிழமை (20) மாலை 6 மணி முதல் இன்று (24) மதியம் 12.00 மணிவரையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் வீதியில் சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.