திருகோணமலையில் கொரோணா தொற்று சந்தேகத்தில் 289 குடும்பங்கள் கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

(கதிரவன் திருகோணமலை)
திருகோணமலை பொலிஸ் பிரிவில் கொரோணா தொற்று சந்தேகத்தில் 289 குடும்பங்கள் கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த இவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 147 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர் என திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே.டமயந்த விஜய சிறி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
2020.03.23 திங்கட்கிழமை பகல் இச்சந்திப்பு உவர்மலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

அது போன்று கந்தளாய் பொலிஸ் பிரிவில் 132 குடும்பங்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

நோய்கண்டறியப்படுவதற்காகவும் சந்தேகிக்கப்படுபவர்களை கையாள்வதற்கும் 7 விசேட குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் பயிற்சி பெற்ற தலா 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். இவர்கள் சுகாதார உத்தியோகத்தர்களுடன் இணைந்து பணியாற்றுவர். இவர்களுக்கு அம்பியுலனஸ் வண்டியுடன் விசேட வாகனங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.