அரசாங்கத்தின் நடவடிக்கையை மீறிய தவிசாளர் கைது !

தம்புள்ளை மாநகரசபை முதல்வர் ஜாலிய ஓபாத உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது தொர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சைக்கிள் ஓட்டப்போட்டியை ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்ற குற்றத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுளள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெயானதைத் தொடர்ந்து இது தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்பியெழுப்பியதைத் தொடர்ந்து, இது தொடர்பில் விசாரிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய , தம்புள்ளை மாநகர சபை மேயரும், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் இன்று (20) தம்புள்ளை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை பிணையில் விடுவித்த தம்புள்ளை மாவட்ட நீதவான், தலா ரூ . 1 மில்லியன் கொண்ட இரு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.