வாழைச்சேனை பகுதியில் முதலை கடித்து சிறுவன் பலி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவமொன்று (2) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அப்பகுதிலுள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் தியாகராஜா கஜேந்திரன் வயது (15) எனும் சிறுவனை முதலை கடித்து இழுத்துள்ளது.

குறித்த சிறுவனின் இடுப்புப் பகுதியில் முதலை பலமாக கடித்து இழுத்த போது பலத்த போராட்டத்திற்கு மத்தியில் இளைஞனின் உடலை முதலையிடமிருந்து மீன்பிடிக்கச் சென்றோர்கள் மீட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.