இங்கிலாந்து பிரதமர் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அவர் பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோயினால் இங்கிலாந்து நாட்டில் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,934 பேர் பலியாகி உள்ளனர்.  இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறுகையில் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என தெரிவித்துள்ளது.