கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா முதல் அமெரிக்கா வரை


சர்வதேச அளவில் கொரோனாவால் இதுவரை 1,202,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

64,753 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

246,457 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,544 ஆக அதிகரித்து, உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

இதற்கு அடுத்த எண்ணிக்கையை ஸ்பெயின் கொண்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126,168 ஆக உள்ளது.

இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,362 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் 20,996 பேர்.