100 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து !

(ஜே.எப்.காமிலா பேகம்)
சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லாகூரிலிருந்து ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த விமானவே இவ்வாறு கராச்சியில் விபத்துக்கு உள்ளாகியது.

விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணம் செய்தவர்களில் ஒருவரேனும் எஞ்சினார்கள் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை