பணம் பகிரப்பட்டதால் மாளிகாவத்த சனநெரிசல் ஏற்பட்டது: விசாரணை தீவிரம்

(ஜே.எப். காமிலா பேகம்)
கொழும்பு மாளிகாவத்த பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மீரானியா வீதியில் செல்வந்தர் ஒருவரால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டபோதே சன நெரிசல் ஏற்பட்டு மூன்று பெண்கள் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.