மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

(லியோன்)
மட்டக்களப்பு சுவிஸ் கிராம த்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின்
தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு சுவிஸ் கிராமம்
பி . வலயத்தை சேர்ந்த 74 வயதுடைய உக்குறாளா பியதாச என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே தனது வீட்டின் முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள வயோதிபரின் மரணம்
தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.