மரண வீட்டில் கரம் உட்பட விளையாட்டுக்கள், மது,வெற்றிலை தடை: புதிய அறிவித்தல்!


(ஜே.எப்.காமிலா பேகம்)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைகின்ற நிலையில், மரண இறுதிச் சடங்கின்போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதாகவும், அனைவருமே முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண வீட்டில் மற்றும் இறுதிச் சடங்கு இடம்பெறும் களத்தில் கைகளைக் கழுவுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கதிரைகளை இடும்போது குறைந்தது ஒருமீட்டர் தூரம் இடைவெளி கொடுக்கப்பட வேண்டும்.

மரண வீட்டில் டாம், கரம், செஸ், காட் போன்ற விளையாட்டுக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல மதுபாவனை, வெற்றிலை இடுதலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் மரண வீட்டில் அடிக்கடி கைகள் தொடும் இடங்களில் தொற்றுநீக்கும் திரவம் தெளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது