பொதுத் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

(ஜே.எப்.காமிலா)
பொதுத் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து 5ஆம் நாளாக இன்றும் இந்த மனுக்கள் மீது விசாரணையும் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.